யாருக்கும் தெரியாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து இந்த பிரபலம் வெளியேறினாரா?
பிக்பாஸ் 5வது சீசன் முடிந்த கையோடு படு வெற்றிகரமாக தொடங்கிய ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சியில் இதற்கு முன் 5 சீசன்களில் வந்த போட்டியாளர்கள் தான் கலந்துகொண்டார்கள்.
பைனல் போட்டியாளர்கள்
16 போட்டியாளர்கள் இடம்பெற தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இப்போது பாலாஜி முருகதாஸ், தாமரை, ரம்யா பாண்டியன், நிரூப், அபிராதி, ஜுலி என 6 பேர் மட்டுமே உள்ளனர். இடையில் எத்தனையோ பிரபலங்கள் வீட்டிற்குள் வந்து சில நாட்கள் இருந்துவிட்டு சென்றுள்ளனர்.
வரும் 10ம் தேதி நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் நடைபெற இருக்கிறது, இதில் யார் ஜெயிப்பார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் பாலாஜி தான் ஜெயிப்பார் என கூறி வருகின்றனர்.
இரவில் நடக்கப்போகும் எவிக்ஷன்
தற்போது இன்று இரவு யாருக்கும் தெரியாமல் ஒரு போட்டியாளர் வீட்டைவிட்டு வெளியேற இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதிலும் அது அபிராமியாக இருக்கக் கூடும் என்கின்றனர்.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
பீஸ்ட் ரிலீஸ் முன்பே விஜய்யின் 66வது பட பூஜை போடப்பட்டது, வெளிவந்த புகைப்படங்கள்