பிரபலம் சொன்னதால் தனது பெயரை மாற்றிய ரியோ ராஜ்.... என்ன பெயர் தெரியுமா?
ஆண்பாவம் பொல்லாதது
கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது.
ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், வெங்கடேஷ், ஷீலா ராஜ்குமார் என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்க டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான இப்படம் கணவன்-மனைவி உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
இப்படத்தின் ஒரு நிகழ்ச்சியில் இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் பேசும்போது, ரியோ ராஜ் இனி உங்கள் பெயரை ரியோ என வைத்துக்கொள்ளுங்கள். ராஜ் வேண்டாம் அது இறங்குவது போல் உள்ளது, ரியோ தான் சூப்பராக இருக்கும் என கூறியிருந்தார்.
மாற்றம்
மிஷ்கின் சொன்னதை ரியோ ராஜ் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. அதாவது அவர் நடிக்கும் புதிய படமான ராம் In லீலா படத்தில் தனது பெயரை ரியோ என்று மட்டுமே வைத்துள்ளார்.
ஆண்பாவம் பொல்லாதது பட வெற்றிக்கு பிறகு ரியோ நடிக்கும் இந்த புதிய படத்தின் போஸ்டருக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
