ஆந்திராவில் பல கோடி மதிப்பில் புதிய பங்களா வாங்கினாரா நடிகை குஷ்பு, இத்தனை கோடியா?- பலே பிளான்
நடிகை குஷ்பு
80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. ரஜினி, கமல் தொடங்கி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து படங்கள் நடித்துவிட்டார்.
சினிமாவில் நாயகியாக வாய்ப்பு குறைந்ததும் தொலைக்காட்சி பக்கம் வந்த குஷ்பு தொடர்களில் நடித்து வந்தார், அப்படியே நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.
இப்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அரசியலில் நடிகை
சினிமாவை தாண்டி நடிகை குஷ்பு அரசியலிலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் அரசியலில் ஒருபடி மேலே செல்ல புதிய வழி பயன்படுத்த இருக்கிறாராம். அதாவது தற்போது ஆந்திராவில் பெரிய பங்களா ஒன்றை வாங்கி இருக்கிறாராம்.
அங்கு 2024ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடிவு செய்து ஆந்திராவில் பங்களா வாங்கியிருப்பதாக பத்திரிக்கையாளர் ஒருவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
22 ஆண்டுகளில் ஒரு பாடல் கூட பாடாதது ஏன்?- முதன்முறையாக கூறிய ஹாரிஸ் ஜெயராஜ்