ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆகிவிட்டதா.. ஷாக்கிங் புகைப்படம்

Kathick
in பிரபலங்கள்Report this article
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். இவர் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இவர் ஏற்று நடித்த நந்தினி கதாபாத்திரம் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என கூட கூறலாம்.
திருமணத்திற்கு முன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆர்த்தயாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராய் குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராய் விவாகரத்து
பாலிவுட் திரையுலகினர் குறித்து சர்ச்சைகளை கிளப்பி வரும் உமைர் சந்து, நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆகிவிட்டது என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதே நேரத்தில் அபிஷேக் பச்சனின் தனது கையில் அணிந்திருக்கும் திருமண மோதிரம் அவருடைய கையில் இல்லை என கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இதையெல்லாம் வைத்து, ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
உண்மை இதுதான்
ஆனால், அது உண்மையில்லை. நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவருடன் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வருகிறார். இது வெறும் வதந்தி தான் என கூறப்படுகிறது. இதுபோன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறப்படுகிறது.