நடிகர் விஷால் உடல் இப்படி ஆக குடிபோதை தான் காரணமா.. அவரே சொன்ன பதில்
நடிகர் விஷால் மதகஜராஜா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தபோது மேடையில் நடுக்கத்துடன் இருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அவருக்கு வைரல் fever இருந்தது தான் அந்த நடுக்கத்துக்கு காரணம் என விளக்கம் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு விஷால் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவை முன்னிட்டு நடந்தபப்பட்ட திருநங்கை அழகி போட்டியில் விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிகள் அவர் திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் சாப்பிடாமல் இருந்தது தான் மயக்கத்திற்கு காரணம் என அவர் தரப்பு விளக்கம் கொடுத்தனர்.
குடிபோதை காரணமா?
விஷால் உடல்நிலை இப்படி மாறி இருப்பது பற்றி சமூக வலைத்தளங்களில் பல விதமான விமர்சனங்கள் வருகிறது. குறிப்பாக அவரது போதை பழக்கம் தான் இதற்கு காரணம் என ஒரு தரப்பு கூறுகிறது.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் விஷால் விளக்கம் கொடுத்து இருக்கிறார். நான் குடிப்பதை நிறுத்தி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என கூறி இருக்கிறார்.
மேலும் புகை பிடிப்பதை ஐந்து வருடங்களுக்கு முன்பே விட்டுவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
