மறைந்த நடிகர் ரகுவனனின் காதலுக்கு நோ சொன்ன பிரபல நாயகி- இதுவரை வெளிவராத தகவல்
நடிகர் ரகுவரன்
தமிழ் சினிமாவில் எத்தனை வில்லன்கள் வந்தாலும் இவரை மட்டும் மறக்கவே முடியாது என்று கூறலாம். வில்லனாக நடித்தாலும் மக்கள் ரசிக்கும் வில்லனாக இருந்தவர் ரகுவரன்.
உயரம், வில்லன்களுக்கு ஏற்ற குரல், ஒரு தனி ஸ்டைல் என நடித்த ரகுவரன் அவர்கள் இன்று நம்முடன் இல்லை.
1982ல் தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.
சினிமாவை தாண்டி இவர் 1996ம் ஆண்டு நடிகை ரோஹினியை திருமணம் செய்தார், பின் சில காரணங்களால் இருவரும் 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். இவர்களுக்கு ரிஷிவரன் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
ரகுவரன் இசையமைத்து தனது சொந்த குரலில் பாடிய ஒரு 6 பாடல்களை ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட அதனை ரோஹினி மற்றும் ரிஷிவரன் பெற்றுக்கொண்டார்கள்.
ரகுவரனின் காதல்
நடிகர் ரகுவரன் அவர்கள் கூட்டுப் புழுக்கள் என்ற படத்தில் அமலாவுடன் இணைந்து நடித்தபோது அவர்மீது காதல் ஏற்பட காதலையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அமலா, ரகுவரனின் காதலுக்கு நோ சொல்லியுள்ளார்.
அந்த காதல் தோல்வி தன்னை மன அழுத்தத்தில் ஆழ்த்தியதாக அபபோதே ஒரு பேட்டியில் ரகுவரன் கூறியிருக்கிறார்.
மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்கு இந்த பிரபலங்கள் உதவுகிறார்களா?- அவரது மனைவி உருக்கம்