அரசியலில் குதிக்கிறாரா நடிகை அனுஷ்கா? தெலுங்கு சினிமாவில் பரபரப்பு
நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கிலும் தமிழிலும் ஏராளமான ஹிட் படங்கள் கொடுத்த நடிகை. அவர் உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுத்து வந்ததால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
தற்போது மீண்டும் படங்கள் நடித்து வரும் அனுஷ்கா ஷெட்டி Kathanar - The Wild Sorcerer என்ற படத்தின் மூலமாக மலையாளத்திலும் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அரசியலில் குதிக்கிறாரா?
இந்நிலையில் அனுஷ்கா ஷெட்டி அரசியலில் குதிக்க போகிறார் என தெலுங்கு மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது. அவர் ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
நடிகை ரோஜாவை எதிர்த்து தான் ஜன சேனா கட்சி சார்பில் அனுஷ்காவை களமிறக்க இருக்கின்றனர் என தகவல் பரவி வருகிறது. அந்த தொகுதியில் தமிழர்கள் அதிகம் என்பதால் அனுஷ்காவின் பாப்புலாரிட்டி உதவும் என கூறப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
