பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா?- ஒரே ஒரு புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்
பாக்கியலட்சுமி சீரியல்
பெங்காலியில் செம ஹிட் தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக விஜய் டிவி ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி. சுசித்ரா மற்றும் சதீஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் தொடரில் இப்போது அனைவருமே பிரபலம் ஆகிவிட்டனர்.
இதில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்குமே தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டது.
அடுத்து கதைக்களத்தில் என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
திடீரென வந்த போட்டோ
இந்த நிலையில் தான் சமூக வலைதளங்களில் பாக்கியலட்சுமி தொடர் குறித்து ஒரு புகைப்படம் வலம் வருகிறது. அது என்னவென்றால் பாக்யா மற்றும் கோபி ஒன்றாக நிற்க சுபம் போடப்பட்ட ஒரு போட்டோ வலம் வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் முடிக்கிறீர்கள் என கேட்டாலும் ஒருசில ரசிகர்கள் நல்ல முடிவு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஆனால் இந்த புகைப்படம் போல் நிஜமாகவே தொடரை முடிக்கப்போகிறார்களா அல்லது தொடர்ந்து ஓடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நடிகை மலைகா அரோராவின் இடுப்பை குறிவைத்து வீடியோ- குவியும் கண்டனம்

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
