அசீம் இதற்கு முன் இந்த பிக்பாஸ் போட்டியாளரை காதலித்தாரா?- யார் தெரியுமா?
பிக்பாஸ் அசீம்
விஜய் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சி ஹிட்டாக ஓடுகிறதோ இல்லையோ ஆனால் பிக்பாஸ் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சி இப்போது 18 போட்டியாளர்களுடன் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த வாரம் இந்நிகழ்ச்சியில் இருந்து ஆயிஷா வெளியேற வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் கடைசி நேரத்தில் கூட எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
இன்று நிகழ்ச்சி குறித்து வந்த புரொமோவில் அசீம் மற்றும் மகேஸ்வரியின் சண்டை பெரிதாக பேசப்படுகிறது, புரொமோக்கள் வைரலாகி வருகின்றன.
அசீம் காதல்
நடிகர் அசீம் விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடரில் நடித்து வந்தார், இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக ஷிவானி நடித்திருந்தார். அந்த சமயத்தில் அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்த செய்தி வெளியாக உடனே மக்கள் அவர் ஷிவானியை காதலிப்பதால் தான் விவாகரத்து பெற்றார் என்று கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் அசீம் இந்த கிசுகிசு வந்தபோதே எனக்கும் மனைவிக்கு சில காரணங்களால் விவாகரத்து பெற்றோம், மற்றபடி யாரும் காரணம் இல்லை என கூறி முடித்தார்.
பிக்பாஸ் பிரபலத்தை நேரில் சந்தித்துள்ள ஜி.பி.முத்து- யாரை தெரியுமா?