கேஜிஎப் 3ல் இவர் தான் வில்லனா? யாரும் எதிர்பார்க்காத நடிகர்
யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் 2 படம் இந்த வருடத்தில் மிக பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்தது. பாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியாத அளவுக்கு ஹிந்தியில் வசூல் சாதனை படைத்து இருக்கிறது இந்த படம்.
இந்நிலையில் அடுத்து ரசிகர்கள் கவனம் முழுவதும் கேஜிஎப் 3 பக்கம் திரும்பி இருக்கிறது. 2ம் பாகத்தின் முடிவில் வந்த காட்சிகள் எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டி இருக்கிறது. மூன்றாம் பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என தகவல் பரவியது, ஆனால் தயாரிப்பு நிறுவனம் ஷூட்டிங் தற்போதைக்கு தொடங்காது என தெரிவித்து உள்ளனர். இயக்குனர் பிரஷாந்த் நீல் அடுத்து பிரபாஸ், ஜூனியர் என்டிஆர் உடன் படங்களில் பணியாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கேஜிஎப் 3ல் வில்லனாக யார் நடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க ஒரு புது தகவல் உலா வருகிறது. பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தான் KGF 3 வில்லனாக நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.


சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
