பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகுகிறாரா இந்த முக்கிய பிரபலம்- ரசிகர்கள் ஷாக்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 975 எபிசோடுகள் ஓடிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
வீனஸ் இன்போடெயின்மென்ட் தயாரிக்கும் இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் ஆகியிருப்பது தமிழ் சின்னத்திரைக்கு கிடைத்த பெருமை.
தற்போது கதையில் அதிரடி மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்து வருகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வமாக தான் உள்ளார்கள்.
காவ்யா இன்ஸ்டா பதிவு
தற்போது இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து வருபவர் காவ்யா. இவர் இப்போது தான் முல்லை கதாபாத்திரத்தில் கொஞ்சம் செட் ஆகியுள்ளார். அதற்குள் அவர் போட்ட பதிவு பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
அதாவது அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் ஸ்டாலின், சுஜிதா, குமரன் ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு மிஸ் யூ ஆல் என பதிவு செய்ய காவ்யா தொடரை விட்டு விலகுகிறாரா என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
டாப் சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் அம்மா-அப்பாவை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க