நாகர்ஜுனாவுக்கு இருக்கும் தைரியம் கமலுக்கு இல்லை, கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்
பிக் பாஸ்
பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் தற்போது 7 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
70 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பல விஷயங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சீசன் மக்கள் மத்தியில் கமல் ஹாசனுக்கு அதிக எதிர்ப்பை சம்பாதித்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது, மாயா கேங்-க்கு சப்போர்ட்டாக பேசுவது போன்ற விஷயங்கள் மக்களுக்கு பிடிக்கவில்லை என தொடர்ந்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் பெண்கள் குறித்து தவறாக பேசிய நிக்சனை கூட கமல் கண்டிக்கவில்லை என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கமலுக்கு தைரியம் இல்லை
இந்நிலையில், தெலுங்கு பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர் ஒருவர் பெண் போட்டியாளரை பார்த்து தவறாக பேசியுள்ளார்.
இதனால் கடுப்பான நாகர்ஜுனா அந்த ஆன் போட்டியாளரை செமையாக வெச்சு செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வைத்து இது போல் செய்ய கமல் ஹாசனுக்கு தைரியம் இல்லை என கூறி வருகிறார்கள் தமிழ் ரசிகர்கள்.
இதோ அந்த வீடியோ..
நாகர்ஜுனாவின் இந்த கட்ஸ் தான் நிக்சன் விஷயத்தில் நாமும் எதிர்பார்த்தது ஆனால்...@ikamalhaasan #BiggbossTamil7 pic.twitter.com/95jCQpnunM
— ???? ???? ??? & ???? (@FilmFoodFunFact) December 11, 2023