பாபநாசம் படத்தில் நடிக்க முதலில் தேர்வானது கமல்ஹாசன் இல்லையா?.. ஜீது ஜோசப் ஓபன் டாக்
பாபநாசம்
மலையாள சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் ஜீது ஜோசப்.
இவரது இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான பாபநாசம் திரைப்படம் செம சூப்பர் டூப்பர் ஹிட்.
செம ஹிட்டான இந்த படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமின்றி சீனா, கொரியா போன்ற உலக மொழிகளிலும் ரீமேக் ஆனது.
ரீமேக்
பாபநாசம் திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு கமல்ஹாசன் நடிக்க தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
இதில் கமலுடன், கௌதமி, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர், தமிழிலும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த நிலையில் இயக்குனர் ஜீத்து ஜோசப் பாபநாசம் படம் குறித்து ஒரு முக்கிய தகவல் கூறியுள்ளார்.
பாபநாசம் படத்தில் முதலில் ரஜினிகாந்த் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தில் போலீஸ் தாக்குவது போன்ற காட்சிகள் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்காது என நினைத்தேன்.
இதற்கிடையே கமல் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள, இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினிகாந்த், சூப்பர் வாழ்த்துக்கள் என அவர் ஸ்டைலில் வாழ்த்தினாராம்.