பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்? அடுத்த தொகுப்பாளர் இவர்தானா
நடிகர் கமல்ஹாசன் தான் பிக் பாஸ் ஷோவை கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். அதற்காக வருக்கு மிகப்பெரிய தொகையும் வருடா வருடம் சம்பளமாக தரப்பட்டு வருகிறது. சினிமாவை விட அவர் இந்த ஷோவில் தான் அதிகம் சம்பாதித்து வருகிறார்.
இருப்பினும் தற்போது ஒளிபரப்பாகி வரும் 7ம் சீசனில் அவர் ஒருதலைப்பட்சமாக இருக்கிறார் என விமர்சனம் எழுந்து வருகிறது. பிரதீப்புக்கு விசாரிக்காமல் ரெட் கார்டு கொடுத்தது, அது சர்ச்சை ஆன பிறகு அதற்கும் தனக்கும் எனது சம்பந்தமும் இல்லை என சமாளித்தது, மாயா கேங்குக்கு ஆதரவாக மட்டும் எப்போதும் பேசுவது என கமல் இருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
விலகுகிறாரா?
இந்நிலையில் கமல் பிக் பாஸில் இருந்து கமல் விலக முடிவெடுத்து இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது உண்மையா என்பது கமல் அதிகாரபூர்வமாக அறிவித்தால் தான் உறுதியாகும்.
கமல் வெளியில் போனால் சிம்பு தான் இந்த ஷோவா தொகுத்து வழங்க வேண்டும் என நெட்டிசன்கள் ட்விட்டரில் பேசி வருகின்றனர்.