சன் டிவியின் கயல் சீரியல் நடிகை பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாரா?- எந்த நடிகை?
பிக்பாஸ் 7
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க கடந்த 2017ம் ஆண்டு பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழில் வெற்றியடைய மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் துவங்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 6வது சீசன் முடிவடைந்த நிலையில் 7வது சீசன் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது.
7வது சீசனில் ரேகா நாயர், நடன இயக்குனர் ஸ்ரீதர், தொகுப்பாளினி ஜாக்குலின் உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ள இருப்பதாக ஒரு லிஸ்ட் வலம் வருகிறது.
புதிய தகவல்
தற்போது மற்றொரு பிரபலத்தின் பெயர் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கயல் சீரியல் நடிகை ஒருவர் பிக்பாஸில் கலந்துகொள்கிறாராம்.
அவர் வேறுயாரும் இல்லை கயல் சீரியலில் டாக்டர் கௌதமுக்கு உதவி செய்து கயலை பழிவாங்கும், வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை அன்னபூரணி தானாம்.
பாசமலர், சொந்த பந்தம், மோகினி, தேவதை, மரகத வீணை, வள்ளி, கல்யாண வீடு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள இவர் ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் கண் தெரியாத டீச்சர் வேடத்தில் நடித்துள்ளார்.
யாருமே எதிர்ப்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் லியோ படக்குழு- விஜய் திரைப்பயணத்திலேயே முதல்முறை