கீர்த்தி சுரேஷ் அவரை காதலிக்கிறாரா? விளக்கம் கொடுத்த பெற்றோர்
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர் பல டாப் ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விரைவில் தசரா படமும் திரைக்கு வருகிறது.
கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. அவர் ஒரு ரிசார்ட் நடத்தும் தொழிலதிபரை திருமணம் செய்ய இருக்கிறார் என முன்பு தகவல் பரவியது. ஆனால் கீர்த்தி சுரேஷ் அது பற்றி வாய்திறக்கவில்லை.
பெற்றோர் விளக்கம்
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் பெற்றோர் ஒரு பேட்டியில் பேசும்போது கீர்த்தி சுரேஷ் யாரையாவது காதலிக்கிறாரா என விளக்கம் அளித்து இருக்கின்றனர்.
"சினிமா துறையில் இருந்தால் இப்படி செய்திகள் வரத்தான் செய்யும். ஒருவேளை கீர்த்தி யாரையாவது காதலித்தால் எங்களிடம் வந்து சொல்வார், அப்போது அறிவிக்கிறோம். அவராக சொல்லாதவரை நாங்கள் அது பற்றி கேட்க மாட்டோம்" என்று கூறி இருக்கின்றனர்.
நாட்டாமை படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு தான்! சரத்குமார் வாங்கிய சம்பளம் எவ்ளோ பாருங்க