ரஜினியை பார்த்து படப்பிடிப்பு தளத்தில் வாடா என அழைத்த நடிகை- ஷாக்கான படக்குழு, நடந்தது என்ன?
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜெயிலர்.
ரூ. 700 கோடி வசூலித்து சாதனை படைக்க சன் பிக்சர்ஸ் சம்பளத்தை தாண்டி ஒரு காரையும் ரஜினிக்கு பரிசளித்தனர்.
இப்பட வெற்றியை தொடர்ந்து ரஜினி அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
படமும் வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகை
ரஜினியுடன் தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினியுடன் முதன்முதலாக இணைந்து நடித்து வந்துள்ளார் குஷ்பு.
மும்பையில் இருந்து வந்ததால் அவருக்கு தமிழ் தெரியவில்லை, ஹிந்தியும், ஆங்கிலமும் மட்டுமே தெரிந்துள்ளது.
அப்போது அவர் ஒருநாள் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்கு வந்தபோது வாங்க என்று சொல்வதற்கு பதிலாக வாடா என்று சொல்லி இருக்கிறார்.
அதைக்கேட்டதும் படக்குழுவினர் அதிர்ச்சியடைய ரஜினி அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாராம். அப்போது உடனிருந்த பிரபு குஷ்புவிடம் சென்று இப்படி கூப்பிட கூடாது என்ன அர்த்தம் என விளக்கியுள்ளார்.