சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா?- ரசிகர்கள் ஷாக்
தமிழ் சினிமாவில் படங்களை தாண்டி சீரியல்களுக்கு தான் இப்போது மக்களின் அதிக ஆதரவு இருக்கிறது. அதிலும் இந்த கொரோனா காலத்திற்கு பிறகு தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்றே கூறலாம்.
ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் பழைய தொடர்கள் எல்லாம் முடிவுக்கு வந்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
அந்த வகையில் ஜீ தமிழில் நிறைய புதிய தொடர்கள் அதிகம் வந்தன, அதேபோல் கலர்ஸ் தமிழிலும் புதிய புதிய தொடர்கள் வந்தது.
குஷ்புவின் மீரா
அந்த வகையில் கலர்ஸ் தமிழில் கடந்த மார்ச் மாதம் குஷ்பு எழுதி, தயாரித்து, நடிக்கும் மீரா என்ற தொடர் ஒளிபரப்பாக தொடங்கியது. சீரியல் ஆரம்பித்த நாள் முதல் நல்ல வரவேற்பு தான் இருந்து வருகிறது.
அதற்குள் ரசிகர்கள் ஷாக் ஆகும் வகையில் ஒரு தகவல், அதாவது கடந்த மார்ச் மாதமே தொடங்கப்பட்ட மீரா தொடர் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனார் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
மறைந்த நடிகை மனோரமாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ புகைப்படம்