அடுத்து ஹாலிவுட் படம் இயக்குகிறாரா ராஜமவுலி? அவரே சொன்ன பதில்

By Parthiban.A Jan 18, 2023 12:15 PM GMT
Report

ராஜமௌலி

இயக்குனர் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தின் கோல்டன் க்ளோப் விருதுக்கு பிறகு உலகமே திரும்பி பார்க்கும் இயக்குநராகிவிட்டார். அந்த படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது.

ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான கோல்டன் க்ளோப் விருது கிடைத்தது. அதற்கு சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி பிரதமர் மோடி வரை பலரும் வாழ்த்து கூறினார்கள்.

அடுத்து ஹாலிவுட் படம் இயக்குகிறாரா ராஜமவுலி? அவரே சொன்ன பதில் | Is Rajamouli Directing A Hollywood Film

ஹாலிவுட் படம் இயக்குகிறேனா?

ராஜமௌளி அடுத்து ஒரு நேரடி ஹாலிவுட் படம் இயக்குகிறார் என ஒரு தகவல் சமீப காலமாக பரவி வருகிறது. அது பற்றி அவரே ஒரு பேட்டியில் விளக்கம் அளித்து இருக்கிறார்.

"நான் இந்தியாவில் படம் எடுப்பதென்றால் சர்வாதிகாரி போன்றவன், யாரும் எதுவும் எனக்கு சொல்ல வேண்டியது இல்லை. ஆனால் ஹாலிவுட்டில் படம் எடுப்பதென்றால் நான் யாருடனாவது கூட்டணி வைத்து தான் படம் இயக்க வேண்டி இருக்கும்" என தெரிவித்து இருக்கிறார். 

அடுத்து ஹாலிவுட் படம் இயக்குகிறாரா ராஜமவுலி? அவரே சொன்ன பதில் | Is Rajamouli Directing A Hollywood Film

வாரிசு சீரியல் மாதிரி இருக்கா? ட்ரோல்களுக்கு இயக்குனர் வம்சி கோபமான பதிலடி 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US