வாரிசு சீரியல் மாதிரி இருக்கா? ட்ரோல்களுக்கு இயக்குனர் வம்சி கோபமான பதிலடி
வாரிசு
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் வாரிசு படம் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. முதல் 7 நாட்களில் இந்த படம் 210 கோடி ருபாய் வசூலித்து இருகிறது என தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
படம் ரிலீஸ் ஆன நாளில் இருந்தே படத்தை ஒரு தரப்பினர் ட்ரோல் செய்து வருகிறார்கள். பார்க்க சீரியல் போல இருக்கிறது என பலரும் விமர்சித்து இருந்தனர்.
வம்சி பதிலடி
இந்நிலையில் இயக்குனர் வம்சி தற்போது அவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
ஒரு சேனலுக்கு அவர் அளித்து இருக்கும் பேட்டியில் "ஒரு படம் எடுப்பது சுலபமான விஷயம் அல்ல. அது ஜோக் கிடையாது. Filmmakers பல விஷயங்களை தியாகம் செய்கிறார்கள். சீரியலை ஏன் degrade பண்றீங்க, மாலையில் பலரையும் engageged ஆக வைத்திருப்பது சீரியல்கள் தான்" என கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் Voting-ல் அரசியல்வாதி தலையீடு: கொந்தளித்த முன்னாள் போட்டியாளர்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
