நடிகர் ரஜினி அவரது திரை வாழ்க்கையில் நடித்துள்ள ஒரே ஒரு விளம்பரம்- எது தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த்
இந்திய சினிமாவில் இருக்கும் ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் இன்று 72வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
எந்த ஒரு விசேஷ நாள் என்றாலும் ரஜினியை அவரது வீட்டில் சந்திக்கும் ரசிகர்கள் பிறந்தநாள் அன்று மட்டும் விட்டுவார்களா என்ன, இன்றும் அவரது வீட்டின் முன்பு ஏகப்பட்ட ரசிகர்கள் தலைவரின் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் நடிகர் ரஜினி அவர்கள் ஊரில் இல்லை, அவருக்காக வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பேட்டி கொடுத்தார், இதனால் கொஞ்சம் வருத்தத்துடன் ரசிகர்கள் வீடு திரும்பினார்கள்.
ரஜினியின் விளம்பரம்
சினிமாவில் உச்சத்தில் இருந்த போது நடிகர் ரஜினிகாந்திற்கு நிறைய விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் ஒரேஒரு குளிர்பான விளம்பரத்தில் ரஜினி நடித்திருக்கிறாராம், அதன்பிறகு தன்னால் எந்தஒரு விஷயமும் தவறாக புரொமோட் ஆக கூடாது என்று விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டாராம்.
ஒரு கார் கம்பெனி ரூ. 200 கோடி கொடுக்கிறோம் என்றும் விளம்பரத்தில் நடிக்க ரஜினியை அணுகினார்களாம், அப்போதும் வேண்டாம் என்றாராம்.
அட நடிகர் ராகவா லாரன்ஸிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?- புகைப்படத்துடன் இதோ