சிறுத்தை சிவா தான் AK 64 இயக்குனரா? பரவிய செய்தி.. ஆனால் உண்மை இதுதான்
நடிகர் அஜித் அடுத்து AK 64 படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. அஜித் கார் ரேஸில் ஈடுபட்டு வந்ததாலும், மேலும் சில காரணங்களாலும் ஷூட்டிங் தொடங்காமல் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
அதனாலேயே பல வதந்திகளும் அடிக்கடி வர தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் சிறுத்தை சிவா உடன் அஜித் மீண்டும் கூட்டணி சேர போகிறார் என ஒரு தகவல் சமீபத்தில் வந்திருக்கிறது.
முந்தைய படமான கங்குவா படுதோல்வி அடைந்த நிலையில் அடுத்து எந்த ஹீரோவும் சிறுத்தை சிவாவுடன் அடுத்து கூட்டணி சேர தயங்குவதாக கூறப்படுகிறது. அதை கேட்டு தான் அஜித் AK 64 வாய்ப்பை அவருக்கு கொடுக்கப்போவதாக தகவல் பரவியது.

உண்மை இதுதான்
இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் வதந்தி என அஜித்தின் மேனேஜர் கூறி இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் தான் இன்னும் AK 64 படத்தின் இயக்குனர் என தெரிவித்துள்ளார்.
அதன் மூலமாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri