விமான விபத்தில் பரிதாபமாக இறந்த நடிகை சௌந்தர்யா தமிழில் இப்படியொரு சீரியல் நடிக்க இருந்தாரா?
தமிழில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று கோலங்கள். சன் தொலைக்காட்சியில் 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது.
மொத்தமாக இந்த தொடர் 1533 எபிசோடுகள் ஓடியுள்ளது, 1000 எபிசோடுகளுக்கு மேலாக ஓடிய முதல் தொடர் இது என்ற பெருமையை பெற்றுள்ளது. திருசெல்வம் கதை எழுதி, இயக்கிய இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார் நடிகை தேவயானி.
முதலில் தேர்வான நடிகை தேவயானிக்கு இந்த தொடர் சின்னத்திரையில் பெரிய ரீச் கொடுத்தது. ஆனால் இதில் முதலில் நடிக்க இருந்ததே விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நடிகை சௌந்தர்யா தானாம்.
அவரும் நடிப்பதாக உறுதி செய்துள்ளார், ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு அரசியல் சம்பந்தப்பட்ட வேலை முக்கியமாக இருப்பதால் அவர் விலக அடுத்து தேவயானி தேர்வாகியுள்ளார்.
50வது நாளில் விஜய்யின் பீஸ்ட்- மொத்தம் படம் செய்த வசூல் விவரம்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
