பிக்பாஸ் 6வது சீசனில் சர்ச்சைக்கு பெயர் போன இந்த சீரியல் நடிகையா?- TRP எகிருமா?
பிக்பாஸ் 6வது சீசன்
விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ். இதுவரை இந்நிகழ்ச்சியின் 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது, இதில் டாப் ஹிட் எது என்றால் முதல் சீசன் தான்.
அந்த அளவிற்கு முதல் சீசன் மக்களிடம் அதிக ரீச் பெற்றது, அடுத்தடுத்து வந்த சீசன்கள் பெரிய அளவில் ரீச் இல்லை என்பது உண்மை.
இப்போது 6வது சீசனிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக வெயிட்டிங்.
சீரியல் நடிகை
நடிகை ஸ்ரீநிதி கடந்த சில மாதங்களாக சிம்புவை காதலிக்கிறேன், அவரை தான் திருமணம் செய்வேன் என ஏதேதோ வீடியோக்களை போட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். பின் தனது நெருங்கிய தோழியான சீரியல் நடிகை நக்ஷத்ராவை பற்றியும் சர்ச்சையாக பேசி வந்தார்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ஸ்ரீநிதி பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
தி லெஜண்ட் சரவணனின் மகள் திருமண உடை மட்டுமே இத்தனை கோடியா?- தங்கம், வைரம் என இருக்கிறதா?