கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸை தொகுத்து வழங்கப்போவது இவர்தானா?... புரொமோ எங்கே படமாக்கப்பட்டது தெரியுமா?
பிக்பாஸ்
விஜய் டிவியில் மிகவும் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வந்தது பிக்பாஸ்.
ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வந்து இப்போது தென்னிந்திய சினிமாக்களில் கலக்கிவரும் ஒரு நிகழ்ச்சி.
கடந்த 2017ம் ஆண்டில் இருந்து தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனும் மாஸ் வரவேற்பு பெற்று 7வது சீசன் வரை வெற்றிகரமாக முடிந்துள்ளது. வரும் அக்டோபர் 2024ம் ஆண்டு பிக்பாஸ் 8வது சீசன் தொடங்கப்படவுள்ளது.
இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்று பார்த்தால் பிக்பாஸில் இருந்து அவர் வெளியேறிவிட்டார்.
புதிய புரொமோ
இந்த நிலையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் 8வது சீசன் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக உள்ளதாம். கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி தான் பிக்பாஸ் 8வது சீசனை தொகுத்து வழங்க கமிட்டாகியுள்ளாராம்.
நேற்று ஆகஸ்ட் 29, பிக்பாஸ் 8வது சீசனின் புரொமோ ஷுட் பாண்டிச்சேரியில் நடந்துள்ளதாம். விரைவில் பிக்பாஸ் 8வது சீசனின் புரொமோ வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
