ஊ சொல்றியா மாமா பாடல் போல் புஷ்பா 2வில் இந்த நடிகை நடனம் ஆட இருக்கிறாரா?
புஷ்பா
தெலுங்கு சினிமாவில் வரும் படங்கள் பல பெரிய ஹிட்டடிக்கிறது. அப்படி மாஸாக வெளியாகி செம ஹிட்டடித்த திரைப்படம் தான் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா.
சுகுமார் இயக்கத்தில் தயாரான இப்படம் ரூ. 250 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாராகி இருந்தது.
ஆனால் படம் செய்த வசூலா ரூ. 350 முதல் ரூ. 365 கோடி வரை கூறப்படுகிறது. செம வசூல் வேட்டை நடத்திய இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். அப்பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கி இருந்தது.

புஷ்பா 2
தற்போது இப்படத்தின் 2வது பாகம் தயாராகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து வர தற்போது பாடல் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. ஊ சொல்றியா பாடல் போல் இரண்டாவது பாகத்திலும் ஒன்று உள்ளதாம்.
அதற்கு சமந்தாவே வருவார் என சில தகவல்கள் வர தற்போது அதுபோன்ற ஒரு பாடலுக்கு நடிகை காஜல் அகர்வால் நடனம் ஆட இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறாரா எலிமினேட் ஆன போட்டியாளர்- எப்போது?
சிங்கப்பூரில் பிரான்ஸ் நாட்டு மாணவரின் தகாத செயல்: ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu