பிக்பாஸில் இந்த செய்தி வாசிப்பாளர் பங்குபெறுகிறாரா?- வெளிவந்த தகவல்
பாலிவுட் சின்னத்திரையில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இப்போது தமிழிலும் வெற்றிகரமாக ஓடுகிறது.
தமிழில் பிக்பாஸ்
2017ம் ஆண்டு ஜுன் 25ம் தேதி முதன்முறையாக பிக்பாஸ் முதல் சீசன் தொடங்கப்பட்டது. அதன்பிறகு அடுத்தடுத்து ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தன.
கடைசியாக 5வது சீசன் வெற்றிகரமாக இவ்வருட ஆரம்பத்தில் முடிவடைந்தது. இந்த சீசன் வெற்றியாளராக ராஜு அவர்கள் தேர்வானார்.
6வது சீசன்
கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் 6வது சீசன் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது என்ன தகவல் எல்லா வருடமும் ஒரு செய்தி வாசிப்பாளர் நிகழ்ச்சியில் பங்குபெறுவது வழக்கம்.
அப்படி இந்த முறை பாலிமர் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான ரஞ்சித் 6வது சீசனில் கலந்து கொள்கிறார் என்கின்றனர்.
சந்தானம் நடித்த குலு குலு படத்தின் 3 நாள் வசூல் விவரம்- எவ்வளவு தெரியுமா?