ராமர் அசைவம் சாப்பிட்டார் என கூறியது தான் நயன்தாரா படத்திற்கு பாதகமாக அமைந்தது.. வைரலாகும் வீடியோ

By Kathick Jan 12, 2024 09:50 AM GMT
Report

அன்னபூரணி

அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் அன்னபூரணி.

உணவை மையமாக வைத்து உருவான இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ், கார்த்திக் குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். திரையரங்கில் 4 வாரங்கள் ஓடிய பின் இப்படம் ஓடிடியில் வெளிவந்தது.

ராமர் அசைவம் சாப்பிட்டார் என கூறியது தான் நயன்தாரா படத்திற்கு பாதகமாக அமைந்தது.. வைரலாகும் வீடியோ | Is This Is A Reason For Annapoorani Movie Backlash

ஆனால், திடீரென இப்படத்தில் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் இதற்கு காரணம் படத்தில் இருக்கும் ஒரு வாசம் தான் என கூறப்படுகிறது.

நயன்தாரா தான் பிராமண பெண், பெருமாளை வணங்கும் கையால் எப்படி அசைவம் சமைப்பது. நான் அசைவம் சமைக்க மாட்டேன் என கூறி வருத்தப்படுவார்.

கேப்டன் மில்லர் திரைவிமர்சனம்

கேப்டன் மில்லர் திரைவிமர்சனம்

படத்தை நீக்க காரணம் இதுதானா

அப்போது, நடிகர் ஜெய் 'நம்முடைய விருப்பு வெறுப்பை தாண்டி கெஸ்ட்டுக்கு சமைத்து கொடுக்க வேண்டும். பல பேர் சபரிமலைக்கு மாலை போட்டு மீன் விற்கிறார்கள், கறி வெட்டுகிறார்கள். பின் மாலை வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு பூஜை செய்கிறார்கள். தொழில் வேறு, பக்தி வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளாதே" என கூறுவார்.

ராமர் அசைவம் சாப்பிட்டார் என கூறியது தான் நயன்தாரா படத்திற்கு பாதகமாக அமைந்தது.. வைரலாகும் வீடியோ | Is This Is A Reason For Annapoorani Movie Backlash

அதன்பின் "வனவாசம் சென்ற ராமர் மற்றும் லக்ஷ்மணன் வனத்தில் பசி எடுத்தபோது மானை வேட்டையாடி சீதையுடன் இணைந்து சாப்பிட்டார்கள் என வால்மிகி இராமாயணத்தில் கூறியுள்ளார். பெருமாளுடைய அவதாரம் தானே ராமர்" என ஜெய்யின் வசனங்கள் இருக்கும். இது தான் அன்னபூரணி படத்தை ஓடிடியில் இருந்து நீக்க காரணம் என சொல்லபடுகிறது. 

இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US