அஜித்தின் வலிமை முக்கிய இடத்தில் படு தோல்வியா?- விநியோகஸ்தரே கொடுத்த விளக்கம்
அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி இருந்தது. எச்.வினோத் இந்த படத்தில் அஜித்தை பெரிய அளவில் காட்டுவார் என ரசிகர்கள் நம்பினார்கள்.
ஏமாந்த ரசிகர்கள்
ஆனால் படத்தில் ரசிக்கும் படியாக அஜித்தின் பைக் காட்சிகள் இருந்ததே தவிர மங்காத்தா அளவிற்கு ஒவ்வொரு சீனிலும் அவரை கொண்டாட முடியவில்லை. அந்த அளவிற்கு கதையில் கொஞ்சம் டல் அடித்தது.
ரசிகர்கள் எப்போதும் போல் அஜித்திற்காகவே படத்தை பெரிய அளவில் கொண்டாடி முடித்துவிட்டார்கள். படமும் இந்த வருட ஹிட் படமாக அமைந்துவிட்டது.

செங்கல்பட்டில் படு தோல்வியா?
சமூக வலைதளங்களில் படம் செம வெற்றி படம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எல்லாம் பெரிய அளவில் இருந்தது என்கின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் சில இடங்களில் படம் நஷ்டம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் முக்கியமாக செங்கல்பட்டு ஏரியாக்களில் படம் நஷ்டத்தை சந்தித்துள்ளது என்றனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர் கொடுத்த பேட்டியில், சமூக வலைதளங்களில் என்ன வேண்டுமானாலும் கூறுவார்கள். எனக்கு வலிமை படம் நஷ்டம் எல்லாம் இல்லை, நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.
இந்த வருடத்தில் வெளியானதில் இப்படம் நல்ல லாபத்தை கொடுத்த படமாக இருக்கிறது என சந்தோஷமாக கூறியுள்ளார்.

விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட 90களின் நாயகி- செம வைரல்