90களில் கலக்கிய பிரபல தொகுப்பாளர் விஜய் ஆதிராஜை நியாபகம் இருக்கா?... இப்போது என்ன செய்யப்போகிறார் தெரியுமா
விஜய் ஆதிராஜ்
தமிழ் சின்னத்திரையில் 90களில் புகழ்பெற்ற டிவி தொடர்களில் நடித்தவர் விஜய் ஆதிராஜ்.
நடிகராக மட்டுமில்லாமல் தொகுப்பாளராகவும் வலம் வந்த இவர் வெள்ளித்திரையிலும் களமிறங்கினார். ஆனால் சின்னத்திரை அளவிற்கு வெள்ளித்திரை கைகூடவில்லை. 2013ம் ஆண்டு புத்தகம் என்ற படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் இப்படம் மூலம் தமிழுக்கு வந்தார்.
படம் வெளியாகி போதிய வரவேற்பை பெறவில்லை, இதனால் விஜய் ஆதிராஜ் அதன்பிறகு படமே இயக்கவில்லை.
அடுத்த படம்
ரஜினியின் முக்கிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகை- என்ன படம் தெரியுமா?
இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார்.
நொடிக்கு நொடி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் செம்பி பட புகழ் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
நாக்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் ஆராக்கியதாஸ் தயாரிக்க அம்ரேஷ் இசையமைக்கிறார்.
பரபரப்பான களத்தில் ஜனரஞ்சகமான ஆக்ஷன் பொழுதுபோக்கு கதையம்சம் கொண்ட படமாக உருவாவதாக இயக்குனர் கூறியிருக்கிறார்.