புதிய தொழிலை தொடங்குகிறாரா நடிகர் விஜய்- கசிந்த தகவல்

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் என்றும் தளபதியாக இருந்து வருகிறார்.
விஜய் அடுத்த படம்
அடுத்து விஜய் நடிப்பில் வாரிசு என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது,
ஆனால் இப்போது அங்குள்ள சினிமா துறையில் பிரச்சனை என்பதால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் மட்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
புதிய தொழில்
விஜய் சினிமாவிலேயே கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார், அதைத் தாண்டி சொந்தமாக நிறைய மண்டபங்களும் வைத்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் ஷோபனா மண்டபம், வடபழனியில் ஒரு மண்டபம், போரூரில் சங்கீதா மண்டபம், புதுக்கோட்டையில் ஒன்று என நிறைய மண்டபங்கள் நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள திருமண மண்டபத்தை தயாரிப்பாளர் லலித்திடம் மாத ரூ. 8 லட்சத்துக்கு வாடகை விட்டுள்ளார்.
இப்போது மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு வாடகை விடப்போவதாக தெரிகிறது. விரைவில் இதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என்கின்றனர். இந்த வாடகை விவரமும் எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பதும் தெரியவில்லை.
நடிகை ஆர்த்தி கணேஷ் வீடு

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
