விஜய் டிவியில் தொடர்ந்து 3 சீரியல்கள் முடிவுக்கு வருகிறதா?... எந்தெந்த தொடர்கள் தெரியுமா?
விஜய் டிவி
விஜய் டிவி, ரியாலிட்டி ஷோக்களின் ராஜாவாக இருப்பவர்கள்.
சமீபத்தில் இந்த தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சிறுவர்களுக்கான சீசன் ஸ்பெஷல் பிரபலங்களின் என்ட்ரியுடன் முடிவுக்கு வந்தது.
முடியும் தொடர்
தற்போது விஜய் தொலைக்காட்சியில் முடிவுக்கு வரப்போகும் 3 தொடர்களின் விவரம் வெளியாகியுள்ளது. ஒன்று 4 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலை முடிக்க முடிவு செய்துள்ளார்களாம்.
பாக்கியா தனி ஆளாக தனது பிரச்சனைகளை போராடி முடிப்பதோடு கதை முடியும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த தொடரின் நேர மாற்றம் ஏற்பட அதில் இருந்தும் டிஆர்பி குறைந்த வண்ணம் உள்ளது. இந்த தொடரை தாண்டி ஆஹா கல்யாணம், சக்திவேல் போன்ற சீரியல்களும் முடிவை எட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்த வாரத்துடன் பொன்னி சீரியல் முடிவுக்கு வரப்போவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகிவிட்டது.

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
