அஜித்தின் விவேகம் பட வில்லன் ரூ.1200 கோடிக்கு சொந்தக்காரரா.. அதிர்ச்சி அளித்த சொத்து மதிப்பு
நடிகர் அஜித்தின் விவேகம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தவர் விவேக் ஓபராய். ஹிந்தியில் பிரபல நடிகரான அவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. இருப்பினும் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் அதிகம் ட்ரோல்களையும் சந்தித்தது.
நடிகர் விவேக் ஓபராய் சுமார் 1200 கோடி ரூபாய் சொத்துக்கு உரிமையாளர் என கூறப்படும் நிலையில் அது பற்றி அவரே தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

15 வயதில் இருந்து சம்பாதிக்கிறேன்
தான் 15 வயதில் இருந்தே சம்பாதிக்கிறேன் என கூறிய அவர், தான் 16 - 17 வயதில் இருக்கும்போதே ஒரு கோடி ரூபாயை ஈட்டியதாகவும் கூறி இருக்கிறார்.
முதலீடுகளை ஈர்த்து பல தொழில்களை தான் தொடங்கி நடத்தி வருவதாகவும், அதனால் பெரிய அளவில் சம்பாதிப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். அவர் சில வருடங்களுக்கு முன்பே துபாயில் செட்டில் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் உங்களுக்கு 1200 கோடி சொத்து இருக்கிறதா என கேட்டதற்கு, "எவ்வளவு இருந்தால் என்ன. கார் இருக்கிறது, வீடு இருக்கிறது. வாங்கிவிட்டேன். வேறு என்ன. என்னுடைய பல தலைமுறைகளை காப்பாற்றும் அளவுக்கு சொத்து இருக்கிறது" என விவேக் ஓபராய் கூறி இருக்கிறார்.
