கமல் படத்தில் சிம்பு நடிக்க கூடாது.. அதிர்ச்சியை கிளப்பிய தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ்
சிம்பு
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் தற்போது கமலுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இதற்கான அறிவிப்பு வெளிவந்தது. இந்த நிலையில், நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் கமலின் தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க கூடாது என பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் புகார் அளித்துள்ளார்.
புகார்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சிம்பு மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளதாம். இதை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் புதிய புகார் ஒன்றை கொடுத்துள்ளாராம். அந்த புகாரின் அடிப்படையில், கொரோனா குமார் திரைப்படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் போட்டுவிட்டு, நடித்து கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும் கூறியுள்ளாராம்.
இது தொடர்பாக ஐசரி கே. கணேஷ் நீதி மன்றத்தை நாடியுள்ளார். அப்போது, இந்த படத்திற்காக சிம்புவிற்கு ரூ. 9.5 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இதில் ரூ. 4.5 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டதாம். ஆனால், சிம்பு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும் ஐசரி கே. கணேஷ் புகாரில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இதே போன்ற புகாரின் அடிப்படையில் இந்த படத்தில் நடித்து கொடுக்கும் வரை வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்து, சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.
நடிக்க கூடாது - படப்பிடிப்பை நிறுத்த வேண்டும்
இந்த நிலையில், மீண்டும் ஒரு குற்றச்சாட்டை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் முன் வைத்துள்ளார். தன்னுடைய திரைப்படத்தில் நடித்து கொடுக்காமலும் அல்லது தன்னிடம் இருந்து வாங்கிய சம்பளத்தை திரும்ப தராமலும் வேறு எந்த திரைப்படத்திலும் சிம்பு நடிக்க கூடாது, அவர் தற்போது நடிக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என ஐசரி கே. கணேஷ் புகார் அளித்துள்ளார்.
நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது சிம்பு இப்படி செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். ஐசரி கே. கணேஷின் புகாரின் அடிப்படையில் இதற்கான விளக்கத்தை சிம்புவிடம் கேட்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாம்.