கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் செம குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஐஸ்வர்யா- வைரல் வீடியோ
சீரியல் நடிகை ஐஸ்வர்யா இவரது புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்களுக்கு ஒரு விஷயம் தான் முதலில் நியாபகம் வரும். ஒரு நடன நிகழ்ச்சியில் பிராங்க் செய்கிறேன் என நடன கலைஞர் ஒருவரிடம் மேடையிலேயே தனது காதலை வெளிப்படுத்துவார், அப்போது அந்நிகழ்ச்சி புரொமோ செம வைரலானது.
ஐஸ்வர்யா பங்குபெற்ற தொடர்கள்
சன் தொலைக்காட்சியில் சூப்பர் குடும்பம், மகாபாரதம், சந்திரலேகா, பைரவி போன்ற தொடர்களின் நடித்து பிரபலமானார். அந்த தொலைக்காட்சியில் ஒரு விருது விழாவை கூட தொகுத்து வழங்கி இருந்தார்.
விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவரை காண முடியும். ஜோடி நம்பர் 1 சீசன் 3 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் நடனம் ஆடியுள்ளார்.
7C தொடரிலும் விஜய் டிவியில் நடித்துள்ளார்.
திருமணம், குடும்பம்
2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவருக்கு கல்கி பிரயா என்ற பெண் குழந்தை 2021ல் பிறந்தார். தற்போது இவர் கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியம் குறித்து தனது பழைய வீடியோவை பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்து ரசிகர்கள் செம ஷாக் ஆகியுள்ளனர்.
கர்ப்ப காலத்தின் விழிப்புணர்வு
கர்ப்ப காலத்தில் தான் மருத்துவர்களின் முழு அறிவிப்புபடி நடனம் ஆடியதாகவும், ஆக்டீவாக இருக்கும் அம்மாக்களின் குழந்தை அதிக எதிர்ப்பு சக்தி பெறும் குழந்தைகளாக இருப்பார்கள் என்றும் கூறி அவரது நடன வீடியோ பதிவிட்டு பெண்கள் தின வாழ்த்து கூறியிருக்கிறார்.
விஜய்யின் 66வது படத்தின் வில்லன் இவரா?- அட நம்ம தல கூட மோதினவரா?