நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் IT ரெய்டு? உண்மை இதுதானா..
ஆர்யா
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆர்யா. அறிந்தும், அறியாமலும், வட்டாரம், நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், மதராசப்பட்டினம் ஆரம்பம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக வேட்டுவம், Mr.X, சார்பட்டா பரம்பரை 2 என எதிர்பார்ப்புக்குரிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
IT ரெய்டு
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், பிசினஸிலும் கடந்த சில ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறார். சென்னையில் மட்டுமே 5 இடங்களில் ஆர்யா சொந்தமாக ஹோட்டல்கள் இயங்கி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை. அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் IT அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படியிருக்க, IT ரெய்டு நடந்துவரும் உணவகங்களுக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, அதன் உரிமையாளர் வேறு ஒருவர் என கூறியுள்ளார் நடிகர் ஆர்யா.
மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம்... பிரித்தானியா முழுவதிலும் மருத்துவமனைகள், பாடசாலைகள் பாதிப்பு News Lankasri
அமெரிக்காவில் பரவலான மின்வெட்டு அபாயம்: அத்தியாவசியப் பொருட்களை சேமித்துவைக்க அறிவுறுத்தல் News Lankasri
பிரித்தானியாவிலிருந்து வெளியேற வாக்கெடுப்பு நடத்திய கிராமம்: ஏமாற்றத்தை அளித்துள்ள தகவல் News Lankasri