ரூ. 3000 கோடி சொத்துக்களை தானமாக வழங்கிய ஜாக்கி சான்.. மகன் சொன்ன அந்த வார்த்தை
ஜாக்கி சான்
உலக புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜாக்கி சான். உயிரை பணையம் வைத்து பல ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார். இதனால் பலமுறை அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார் ஜாக்கி சான்.

அண்மையில், நடிகர் ஜாக்கி சான் தனது ரூ. 3000 கோடி சொத்துக்களை அறக்கட்டளைக்கு தானமாக வழங்கிவிட்டார் என்கிற செய்தி வெளிவந்தது.
இதை கேள்விப்பட்ட பலரும், 'பணம் வைத்திருக்கும் பலருக்கும் இந்த மனசு இல்லை' என கூறி ஜாக்கி சானை வாழ்த்தினார்கள். இந்த நிலையில், தான் தானமாக வழங்கிய ரூ. 3000 கோடியை குறித்து தனது மகன் என்ன கூறினார் என்பதை பற்றி பேசியுள்ளார் ஜாக்கி சான்.
மகன் சொன்ன அந்த வார்த்தை
அவர் கூறியதாவது, "என்னுடைய ரூ. 3000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முழுவதையும் நான் ஏழைகளுக்காக அறக்கட்டளைக்கு வழங்கி விட்டேன். இதை பற்றி என் மகனிடம் 'உனக்கு எவ்வித வருத்தமும் இல்லையா?' என்று கேட்டேன்.

அதற்கு என் மகன் 'ஜேசி சான்' நானும் திறமைசாலிதான், தானாகவே உழைத்து பணம் சம்பாரிக்க விரும்புகிறேன். நீங்கள் சம்பாரித்த செல்வத்தை நான் வாரிசு என்பதற்காக கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. பிறர் உதவியின்றி உழைப்பின் மூலம் நானும் முன்னேற ஆசைப்படுகிறேன் என கூறிவிட்டான்" என்றார் ஜாக்கி சான்.