தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் ஜெயிலர்.. இதுவரை இத்தனை கோடி வசூலா
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் - சன் பிச்சர்ஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மாபெரும் வெற்றியடைந்துள்ள இப்படம் உலகளவில் எதிர்பார்த்ததை விட வசூல் சாதனை படைத்து வருகிறது.
மேலும் தமிழ் நாட்டிலும் ஜெயிலர் படத்தின் வசூல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே இருக்கும் இந்த நிலையில், இதுவரை தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாக்ஸ் ஆபிஸ்
அதன்படி, ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து 15 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 167 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இனி வரும் நாட்களிலும் இப்படம் தமிழகத்தில் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெயிலர் பட வில்லன் விநாயகன் முழு சொத்து மதிப்பு, எவ்வளவு தெரியுமா