ஜெயிலர் 2 திரைப்படத்தில் வில்லனாக இவர் நடிக்கிறாரா? வெறித்தனமான சம்பவம் காத்திருக்கு
ஜெயிலர் 2
தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக ரஜினியின் ஜெயிலர் உள்ளது. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்தது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். உலகளவில் ரூ. 635 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக யார் நடிக்கப்போகிறார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளிவரவில்லை.
இவர் தான் வில்லனா
இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படத்தில் மிரட்டலான நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இப்படத்தின் வில்லன் யார் என தெரியாமல் இருந்த நிலையில், பகத் பாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்திருப்பதால், அவர் வில்லனாக இருக்கலாம் என சமூக வலைத்தளத்தில் பேச்சு எழுந்துள்ளது.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை. மேலும் ரஜினியுடன் இதற்கு முன் வேட்டையன் திரைப்படத்தில் பகத் பாசில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
