25 நாட்களாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தின் தமிழக வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை
ஜெயிலர்
2.0 படத்திற்கு பின் பாக்ஸ் ஆபிசில் ரூ. 600 கோடியை கடந்து வசூல் செய்துள்ள தமிழ் படம் என்ற சாதனையை ஜெயிலர் படைத்துள்ளது.
ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக ரஜினிக்கும், நெல்சன் திலீப்குமாருக்கு விலைஉயர்ந்த சொகுசு காரை பரிசாக கொடுத்தார் தயரிப்பாளர் கலாநிதி மாறன்.

இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி விரைவில் அமையும் என கூறப்படுகிறது. அது ஜெயிலர் 2 வாக கூட இருக்கக்கூடும் என சில தகவல் வெளியாகியுள்ளது.
25 நாட்கள் தமிழக வசூல்
உலகளவில் ரூ. 600 கோடியை கடந்துள்ள ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
இதில், முதல் நாள் தமிழகத்தில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த ஜெயிலர் படம், 25 நாட்களை கடந்துள்ள நிலையில், ரூ. 195 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

வருகிற 7ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையிலும், ஜெயிலர் படத்திற்கு திரையரங்கில் வரவேற்பு கூடியுள்ளது.
இரண்டு நாட்களில் குஷி படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் சமந்தா..
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri