ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்த சிவராஜ்குமாரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ரஜினியின் ஜெயிலர்
கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.
தமிழகத்தில் மட்டுமே ரூ. 150 கோடிக்கு மேல் வசூலிக்க உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது.
வெளிநாட்டில் கூட படத்திற்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது, ரஜினியின் முந்தைய படமான அண்ணாத்த படம் வசூலில் கொஞ்சம் சொதப்பினாலும் ஜெயிலர் டாப் வசூல் செய்து வருகிறது.
ஜெயிலர் வெற்றியை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிவராஜ்குமார்
இந்த ஜெயிலர் படத்தில் மாஸ் ரோலில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடித்திருந்தார். சின்ன கதாபாத்திரம் என்றாலும் ரஜினிக்காக நடித்து கொடுத்துள்ளார்.
கன்னடத்தில் இவர் மிகப்பெரிய ஸ்டார், முன்னணி நடிகர், இவரது தந்தை ராஜ்குமாரும் முன்னணி நடிகராக இருந்துள்ளார்.
தற்போது சிவராஜ்குமாரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஒவ்வொரு படத்துக்கும் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கும் இவரது சொத்து மதிப்பு ரூ. 210 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்யும் ஜெயிலரின் இதுவரையிலான கலெக்ஷன்- முழு விவரம்

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
