ஜெயிலர் ரஜினி மருமகள் மிர்னா ஏற்கனவே விவாகரத்து ஆனவரா? இந்த தமிழ் ஹீரோவின் முன்னாள் மனைவியா
ஜெயிலர்
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் தற்போது வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை 375.4 கோடி ருபாய் வசூல் செய்து இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜெயிலர் படத்தின் வெற்றி விழா இன்று நடந்து முடிந்திருக்கிறது. நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் பத்ரிக்கையாளர்களை சந்தித்து ஜெயிலர் வெற்றிக்கு நன்றி கூறி இருக்கின்றனர்.
மிர்னா மேனன்
ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் நடிப்புக்கும் தற்போது இணையத்தில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. அவரை பற்றி அதிகம் பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.
மிர்னா மேனன் இதற்கு முன்பு தமிழில் அதிதி மேனன் என்ற பெயரில் படங்களில் நடித்து இருக்கிறார். அப்போது நடிகர் அபி சரவணன் என்பவருடன் காதலில் விழுந்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும் அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அவர்களது விவகாரத்து வழக்கு சில வருடங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன் சுசித்ரா தமிழில் நடித்த முதல் சீரியல் எது தெரியுமா?- வெளிவந்த தகவல்

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
