15 நாட்களில் வசூலை வாரிக்குவித்த ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
ஜெயிலர்
ரஜினிகாந்த், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெரோஃப், சிவராஜ்குமார் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து கடந்த 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது.
வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 550 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் ரூ. 600 கோடியை தொடும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
சிறகடிக்க ஆசை நடிகையா இது.. துளிகூட மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri