ஜெயிலர் பட நடிகர் ஜாக்கி ஷெராஃப் சொத்து மதிப்பு.. வெளிவந்த விவரம் இதோ
சொத்து மதிப்பு
பாலிவுட் திரையுலகில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜாக்கி ஷெராஃப். இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் 13 மொழிகளில் நடித்துள்ளாராம்.
தமிழில் இவர் தளபதி விஜய்யுடன் பிகில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இன்று நடிகர் ஜாக்கி ஷெராஃப்பின் பிறந்தநாள். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பாலிவுட் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரான ஜாக்கி ஷெராஃப்பின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
அதன்படி, 40 வருடங்களாக சினிமாவில் பயணித்து கொண்டிருக்கும் நடிகர் ஜாக்கி ஷெராஃப்பின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 212 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். மும்பை பாந்திராவில் இவருக்கு சொந்தமாக ரூ. 31 கோடி மதிப்புள்ள வீடு ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.