அனிருத் கூறிய ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம்.. படம் நல்லா இருக்கா? இல்லையா?
ஜெயிலர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இவருடைய இசையில் வெளிவந்துள்ள காவாலா மற்றும் Hukum ஆகிய இரண்டு பாடல்களும் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
ரசிகர்கள் இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ள நிலையில், கடந்த 2ஆம் தேதி வெளிவந்த ஜெயிலர் டிரைலர் அதை இன்னும் அதிகரித்துவிட்டது.
அந்த அளவிற்கு வெறித்தனமாகவும் மாஸாக இருந்தது ஜெயிலர் பட டிரைலர். வருகிற 10ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் கதை குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.
முதல் விமர்சனம்
இந்நிலையில், முதல் விமர்சனம் அனிருத் மூலமாக வெளிவந்துள்ளது. ஆம், தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயிலர் என பட பெயரை குறிப்பிட்டு கோப்பை எமோஜியை பதிவு செய்துள்ளார்.
ஜெயிலர் குறித்து அனிருத் தெரிவித்துள்ள இந்த விமர்சனம் படம் ப்ளாக் பஸ்டர் என ரசிகர்கள் கொண்டாட துவங்கிவிட்டனர்.
Jailer ?????????
— Anirudh Ravichander (@anirudhofficial) August 4, 2023
ரிலீஸுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்த ஜெயிலர்.. ரஜினியின் சம்பவம் ஆரம்பம்