விக்ரம்-ன் ROLEX-க்கு போட்டியாக, ஜெயிலர் படத்தில் களமிறங்கும் முன்னணி நடிகர்!
ஜெயிலர் படத்தில் முக்கிய நடிகர்
கமல் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இப்படம் 2 வாரங்களை கடந்தும் வசூல் மழையை பொலிந்து வருகிறது.
அதன்படி தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ஐந்து வருடங்களாக நிலைத்து வந்த பாகுபலி 2 வசூலை முறிடித்துள்ளது விக்ரம், இதனால் தற்போது விக்ரம் தமிழ்நாட்டின் புதிய Indutry Hit திரைப்படம் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கமல் தற்போது பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்துள்ள நிலையில் ரஜினியின் அடுத்த திரைப்படமான ஜெயிலரை தான் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் நேற்று தான் தலைவர் 169 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தை அதிகாரபூர்வமாக ஜெயிலர் என போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தில் இப்போது வரை பெரியளவில் பேசப்பட்டு வரும் விஷயம் சூர்யாவின் ROLEX கதாபாத்திரம் தான். இப்போது இதற்கு போட்டியாக ஜெயிலர் படத்தில் களமிறங்கவுள்ள நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், அதன்படி ஜெயிலர் படத்தில் கன்னட திரையுலகின் டாப் நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளன.

கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நடிகை சிம்ரன் சொன்ன விஷயம் ! என்ன தெரியுமா?