ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய நடிகர் நடித்து முடித்த காட்சி! புதிதாக இவரும் இணைந்துள்ளாரா?
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் முக்கிய திரைப்படம் ஜெயிலர்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது, அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோஸ் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தன.
மேலும் நேற்று ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ள முக்கிய கதாபாத்திரத்தில் குறித்த நட்சத்திரங்கள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவித்து இருந்தனர்.
முக்கிய நடிகர்
இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம், பருத்திவீரன் திரைப்படம் புகழ் சரவணன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். அவர் இப்படத்தின் நெகட்டிவ் ரோலில் நடித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் சரவணன் நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இளம் வயதில் கேப்டன் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் பாருங்க

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
