ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருந்து லீக்கான புகைப்படம்.. கசிந்தது ரஜினியின் நியூ லுக்
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றில் இருந்து துவங்கியது.
படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் First லுக் போஸ்ட்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.
ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பில் இருந்து கசிந்த புகைப்படம்
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து ரஜினிகாந்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
First லுக் போஸ்டரில் செம மாஸ், ஸ்டைலான லுக்கில் இருந்த ரஜினிகாந்த், இந்த புகைப்படத்தில் காக்கி பாண்ட் மற்றும் கசங்கிப்போன சட்டையில் இருக்கிறார்.
மேலும், இந்த காட்சி ரஜினிகாந்த் குடித்துவிட்டு தெருவில் நடந்து வருவது போல் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
