ரிலீஸ் முன்பே முன்பதிவில் பல கோடி வசூலிக்கும் ரஜினியின் ஜெயிலர்- இத்தனை கோடிகளா?
ரஜினியின் ஜெயிலர்
பீஸ்ட் படத்தை முடித்த கையோடு நெல்சன் திலீப்குமார் ரஜினியுட இணைந்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் மோகன்லால், சுனில், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரெடின் கிங்ஸ்லி என பலர் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் எல்லாம் படு வேகமாக நடந்து வருகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க பாடல்களும் வெளியாகி இருக்கிறது.

ப்ரீ புக்கிங்
தற்போது படத்தின் ப்ரீ புக்கிங் படு வேகமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புக்கிங் விவரங்கள் வெளியாக ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
தற்போது வரை ப்ரீ புக்கிங்கில் படம் ரூ. 8 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

டெலிவரிக்கு பின்பு 3 மாதத்தில் உடல் எடையை நடிகை ஆலியா பட் குறைத்தது எப்படி- டயட் பிளான் இதோ