தீடீரென நின்று போன ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு.. காரணம் இதுதான்
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும், சிவராஜ் குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஆதித்யராம் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.
நின்று போன படப்பிடிப்பு
பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த ஜெயில் செட்டில் நடைபெற்று வந்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்க்கு காரணமே சென்னையில் பெய்த கனமழை தான் என்று கூறுகிறார்கள். மேலும், தற்போது மீண்டும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதியிலே நிறுத்தப்பட்ட சூர்யாவின் வணங்கான் திரைப்படம் குறித்து இயக்குநர் பாலா தெரிவித்த தகவல் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    